ஊட்டி மேட்டுப்பாளையத்திலிருந்து பத்து நிமிடப் பேருந்துப் பயணத்தில் காண்போர் விழிகளை எல்லாம் விரிய வைக்கும் வகையில் வானளாவ உயர்ந்து நிற்கவில்லை என்றாலும், அப்பொழுது தான் பள்ளிப் படிப்பை முடித்து இருக்கும் மாணவ மாணவிகள் எல்லாம், அடுத்து என்ன படிப்பது, மேற்படிப்பிற்கு எங்கு சேர்வது என்று யோசிக்கும் சமயம், நிச்சயம் அவர்களின் எண்ண அடுக்குகளில் வந்து நிற்கும் அளவு, அப்பகுதி முழுவதும் பிரசித்தி பெற்ற கல்லூரிகளுள் ஒன்றாக, பல ஏக்கர் பரப்பளவில் ஒய்யாரமாகவே வீற்றிருந்தது தேவி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகம். (Devi Engineering college of Technology) பச்சை பசுமை நிரம்பிய இயற்கை மிகும் சூழலில், பரந்து விரிந்த தளமதில், வாயிலைத் தாண்டிய பத்து நிமிட நடையில், கல்லூரியின் நிர்வாக அலுவலகமும், அடுத்தடுத்த பல கட்டிடங்களில், கல்லூரியின் மூன்றடுக்கு வகுப்பறைகளும், பெரிதான செமினார் ஹாலும், கேண்டினும், ஆய்வகம், நூலகம், போன்ற இன்னும் சில பகுதிகளும், கண்ணையும் கருத்தையும் நிறைப்பதாக இருக்க, அந்த பிரமாண்ட கல்லூரி வளாகமோ வழக்கத்தை எல்லாம் விட இன்று மிகவுமே பரபரப்பாகக் காட...
Comments
Post a Comment