நூலகம் -19.2

அன்றைய நாளில் மட்டுமல்லாது, அடுத்து வந்த ஒன்றிரண்டு நாட்களுக்கும், செழியன், சிற்பியின் திருமண விசயம் தான் கல்லூரி முழுதிலும், பேசு பொருளாய் ஆகி இருக்க, அதை முன்கூட்டியே கணித்திருந்தவனோ, தன்னோடு மனைவிக்கும் சேர்த்தே, ஒரு வாரகாலம் விடுமுறையை எடுத்து, வீட்டிலேயே இருந்து கொண்டான் செழியன்.


செழியனும் சிற்பியும், தம்பதியர் என்ற செய்தியிலே வெகுவாக அதிர்ந்து போன ராம்சரணுக்கு, விடுமுறையில் இருக்கும் செழியனை அலைபேசியில் அழைத்து தொல்லை செய்யவும் விருப்பம் இல்லாமல் இருக்க, ஒருமாதிரி குழப்ப மனநிலையில் தான் சுற்றிக் கொண்டிருந்தான்.


குழம்பிய குட்டையில் தான் மீனைப் பிடிக்க முடியும், என்று தப்பாக கணக்கைப் போட்டாளோ என்னவோ, "ராம் சார்" என்று அவனைத் தேடி வந்திருந்தாள் யாழினி.


சமீப நாட்களாகவே, அவளின் காதல் இம்சைகள் அதிகரித்துக் கொண்டே இருப்பதில், அவளை தவிர்க்க முடியாது திண்டாடிக் கொண்டிருப்பவன், "ஹான், வாட் ஹேப்பன் யாழினி?" என்று அவள் விழிகளைப் பாராமலே கேட்டிருக்க,


அதில் சிறிதாக புன்னகை புரிந்தவளும், "வர வர ரொம்ப பண்றீங்க ராம் சார். உங்களைப் போல, சும்மா பாக்கிறதுக்கெல்லாம் நா கன்னம் சிவக்க மாட்டேன். அதனால என் முகத்தை பாத்தே பேசுங்க" என்று சொல்லியபடி அவன் அமர்ந்திருந்த திண்டின் மறுபுறம் அமர்ந்தாள் யாழினி.


அதில் அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவனைக் கண்டு அவள் லேசாகக் கண்ணைச் சிமிட்டிச் சிரிக்கவும், அவள் சொன்னது போலவே, கன்னம் சிவந்து, பார்வையை திருப்பிக் கொண்டவன், "இதுக்குத்தான் பாக்குறதே இல்லை. அப்பயும் தேடி வந்து வம்பு பண்றாளே" என்று முணகிவிட்டு,
"என்ன விஷயம் யாழி. சீக்கிரம் சொல்லு. நா ஸ்டாப் ரூம் போகணும்" என்று கராறாகவே கேட்டான்.


"அப்டிலாம் இவ்ளோ நாள் விட்ட போல இனிமேலும் விட முடியாது ராம் சார்" என்று சற்றே அவனை நெருங்கி அமர்ந்தவள், "அதான் அண்ணா விஷயமும் தெரிஞ்சிடுச்சில்ல ராம். சிற்பிக்காக, அண்ணா எவ்ளோ சப்போர்ட் பண்ணாங்கன்னு நீங்களே பாத்தீங்க தானே. இன்னும் ஏன் என்னவிட்டு விலகியே போறீங்க? இனியாவது என் காதலை ஏத்துக்கோங்க" என்று ஆற்றமையாகக் கேட்டாள் யாழினி.


முன்பே, அவர்கள் காதலர்கள் என்று யாழினி கூறி இருந்தாலும், இத்தனை தினங்கள் பிடிவாதமாக அதை நம்ப மறுத்து இருந்தவனுக்கு, இப்பொழுதெல்லாம், நெஞ்சம் தடுமாறத் தொடங்கியது.


ஆனாலும், குருவை மிஞ்சிய சிஷ்யனாக, அவள் நெருங்கி அமர்ந்ததற்கே, சுற்றி முற்றியும் பார்த்து, "யாழி, இது காலேஜ்" என்ற எச்சரிக்கையோடு தள்ளி அமர்ந்தவன், "விலகி போகாம என்ன செய்ய சொல்ற யாழி? உன் அண்ணா சூழ்நிலை காரணமா செஞ்ச ஒரு விஷயத்தை, நா அட்வான்டேஜா எடுத்து, அவருக்கு இன்னும் சங்கடம் சேர்க்க சொல்றியா?" என்று கேட்டான் பதிலுக்கு.


"நீங்க என்ன, லவ் பண்றதுல அண்ணாக்கு என்ன சங்கடம் வரப்போகுது ராம்?" என்று அவளும் அவனை ஆயாசமாகப் பார்க்க,


"உன் அண்ணா இவ்ளோ நாளா தன்னோட மேரேஜ மறைச்சு வச்சதுக்குக் காரணம், ஒரு பக்கம் சிற்பியோட படிப்பா இருந்தாலும், தான் பாடம் சொல்லி கொடுக்குற மாணவியையே செழியன் சார் மேரேஜ் பண்ணிருக்காரு, அப்போ நாமளும் நம்மகிட்ட படிக்கிற பொண்ணை, லவ் பண்ணலாம், மேரேஜ் பண்ணலாம்னு, யாருக்கும் ஒரு தப்பான முன் உதாரணமா இருந்துடக் கூடாதுன்னு தான் அப்டி பண்ணிருப்பாரு யாழி. அப்டி இருக்கப்போ, நம்ம விஷயம் கேள்விப்பட்டா, அவரு சந்தோசப் படுவாருன்னு நினைக்கிறியா?" என்று அவளை ஏறிட்டுப் பார்த்தான் ராம்சரண்.


ஏற்கனவே அவன் மீது பைத்தியமாக இருக்கும் பெண்ணவளுக்கு, இக்கணம் ஆணின் அந்தப் பேச்சில், "இவருக்குத்தான் தன் ஆசிரியப்பணி மீதும், அண்ணனின் மீதும், எத்தனை ஒரு மரியாதை? எப்படியான ஒரு புரிதல்" என்று அவன் மீது கொண்ட காதல் பித்து நிலைக்கே செல்லத் தொடங்கியது.


அதில், "ராம்" என்று அவன் விழிகள் ஒளிர, அவனை நெருங்கி வந்தவள், "இவ்ளோ நாளா, உங்களைப் போல ஒரு ஹஸ்பண்ட் கிடைச்சா, நா ஹாப்பியா இருப்பேன்னு தான் நினைச்சுருக்கேன் ராம். ஆனா,
நீங்க என் லவ்வை அக்சப்ட் பண்ணலைன்னா, என் மொத்த பெமிலியுமே, ஒரு நல்ல மனுஷனை மிஸ் பண்ணிடுவாங்க. அவங்களுக்காகவாச்சும், என் லவ்வை ஏத்துக்கோங்க ராம், லவ் யூ சோ மச் ராம்" என்று அவன் கன்னத்தில் சிறு முத்தத்தையும் இட்டு இருந்தாள்.


அவள் வார்த்தையிலும், பார்வையிலும் சிறிது சிறிதாக இளகிக் கொண்டிருந்தவன், திடீரென்ற பெண்ணின் அந்தச் செயலை சற்றும் எதிர்பார்க்கவே இல்லை.


நல் ஒழுக்கத்தையும், நற் சிந்தனைகளையும், தன் சொத்தாகக் கொண்டு, தன்னிடம் பயிலும் மாணவ மணிகளுக்கும், அதையே உயிர் என்று போதிக்கும் ஆசான் அவன்.


அவனிடம் போய், அதிலும் பாடங்கள் பயிலும் கல்லூரியில் வைத்தே, ஒரு மாணவி இப்படி நடப்பதா?


அச்சமயம், அக்கணம், அவள் தன்னை நேசிப்பவள், தன் குருவின் தங்கை, என்றெல்லாம் அவனுக்கு இம்மியும் சிந்தையில் இல்லை.


முதலில் அதிர்ந்து, பின் வெகுண்டெழுந்தவன்,
"யூ பிளடி இடியட்" என்று
அவள் கன்னத்தில், ஓங்கி அறைந்திருந்தான்.


அறைந்ததோடு நில்லாது, சுற்றியும் முற்றியும் பார்த்து, தங்களை யாரும் பார்க்கவில்லை என்பதையும் உறுதி செய்து கொண்டவன், "எங்க வச்சி என்ன வேலை பாக்குற? கொஞ்சமும் அறிவில்லையா உனக்கு? அப்டி என்ன எல்லாத்துக்கும் அவசரம்? இப்படித்தான் லூசு மாறி ஏதோ பண்ணி, சிற்பிக்கும், சார்க்கும் லவ்ணு உளறி, உன் அண்ணா பெயரையும் ஸ்பாயில் பண்ணி வச்சிருக்க... இப்போ என் பெயரையும் கெடுக்காம விடக்கூடாதுன்னு கண்கணம் கட்டிட்டு திரியுறியா? நீலாம் படிக்கிற பொண்ணு தான? கொஞ்சமும் மேனர்ஸ் இல்ல?" என்றெல்லாம் அவன் இஷ்டத்திற்கு திட்டிக் கொண்டே சென்றான்.


ஆடவனின் அந்த அறையை விடவும், அவன் வீசிய வார்த்தைகள் தான் அவள் நெஞ்சை தீயாய் சுட்டது.


'நான் அனைத்திற்கும் அவசரப் படுகிறேனா? என் அண்ணனின் பெயரை நான் கெடுத்தேனா?
அவன் பெயரையும் கெடுக்கப் பார்க்கிறேனா? எத்தனை பெரிய குற்றச்சாட்டுக்கள். வலிய வலியப் போனால், வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவார்களா? வழியில் கொட்டிக் கிடந்தால் வைரத்திற்குக் கூட மதிப்பில்லையோ?'


சில கணங்கள் விழி மூடித் திறந்தவள், "இதுவரைக்கும் நா கொடுத்த கஷ்டத்துக்கெல்லாம்
வெரி வெரி சாரி சார்! இனிமேல் உங்க கண் முன்ன கூட வரமாட்டேன். அப்டி வந்தா, என்ன செப்பல் கழட்டி அடிங்க" என்று கரகரத்த குரலில் கூறிவிட்டு, அவனைத் திரும்பிக்கூடப் பாராமல் வேகமாக அங்கிருந்து ஓடி இருந்தாள் யாழினி.


அவள் கூறிய வார்த்தைகளைக் கேட்டப் பின்னர் தான், சட்டென்று தன்னை நிதானித்து, "ஹேய் யாழி" என்று அவள் பின்னோடே செல்லப்போனவன், அவள் நிற்காமல் ஓடோடிச் செல்லவும், சிறு வலிமிகுந்த பார்வை ஒன்றை அவளை நோக்கிச் செலுத்தி,
"யாழி, ஏன்டி என்னப்போய் காதலிச்ச? ஒரு பொண்ணோட காதலுக்குலாம் நான் லாயக்கில்லடி" என்று அங்கிருந்த மரத்தினில் ஓங்கி ஓங்கிக் குத்தி அவளை அடித்த கையை தானே காயமாக்கிக் கொண்டான் ராம்சரண். ஆனால் அவன் வார்த்தைகள் அவளிடம் உண்டு பண்ணிய காயத்தை, எப்படி ஆற்றப் போகிறான் என்று தான் அவனுக்கே தெரியவில்லை.


இதேசமயம், அங்கு செழியன் வீட்டிலோ, கடந்த இரண்டு தினங்களாகவே செழியனின் தனி அறைக்குள்ளே தான் அடைந்து கிடந்தாள் சிற்பிகா தேவி.


அன்று கல்லூரியில் அனைவரிடமும், தன் மனைவி என்று அறிவித்து, அவளை அழைத்து வந்தவன், மருமகளின் அழுத முகம் கண்டு பதறிய மீனாட்சியிடம் கூட, அவளை தொந்திரவு செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டு, தன் அறைக்குள், தன் அருகிலே தான் மனைவியை வைத்து பார்த்துக் கொண்டான் செழியன்.


கல்லூரிக்குக் கூட விடுப்பை எடுத்து விட்டு, இரவும் பகலும், அவளருகிலே நேரம் செலவழிப்பவனின் செயலில், அவள் துன்பம் எல்லாம் குறைவதற்கு பதிலாய், 'தன்னால் தானே, இவருக்கு இந்த கஷ்டம்!' என்று மீண்டும் ஓட்டுக்குள் நத்தையாய் தன்னை சுருக்கிக் கொண்டவள், சற்று முன்னர் மீனாட்சி கொண்டு வந்து வைத்த காபியைக் கூட அருந்தியே இருக்கவில்லை.


அப்பொழுது தான் அருகில் ஏதோ வேலையாகப் போய் விட்டு, வேகமாக அறைக்குள் வந்தவனுக்கு, காபி மட்டுமல்லாது, அங்கு தட்டில் மூடி இருந்த உணவும், அவள் மதியமும் சாப்பிடவில்லை என்று தெளிவாக உணர்த்தி இருக்க, சிறு பெருமூச்சோடு பெண்ணவளை நெருங்கியவன், "கேர்ள்" என்று அவள் தோள் தொட்டு அழைத்தான்.


அதில், உஸ்வாரின்றி அவனை ஏறிட்டுப் பார்த்தவளின் விழியில், கண்ணீர்த் துளிகளும் துளிர்த்து இருக்க, சட்டென்று அருகில் அமர்ந்து அதை கன்னங்களைத் தாண்ட விடாது கட்டைவிரல் கொண்டு துடைத்து விட்டவன், "என்ன கேர்ள். இன்னும் அழுத்திட்டே இருந்தா என்ன அர்த்தம்?" என்று கவலையாகக் கேட்டான்.


ஆணின் அந்த கரிசனையில்
அவளுக்கு மென்மேலும், குற்ற உணர்வுகள் பெறுக, "அழாம என்ன செய்ய சொல்றீங்க ட்ரைனர்?
அதான் என்னோட சேர்த்து, உங்க இமேஜையும் போதும் போதும் மட்டும் ஸ்பாயில் பண்ணிட்டேனே" என்று கரகரத்த குரலிலே சொன்னாள் சிற்பி.


"அப்டிலாம் இல்லம்மா. நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காத. முதல்ல எழுந்து சாப்பிடு" என்று அவள் முகம் பற்றிச் சொல்ல,


"எனக்கு வேணாம் ட்ரைனர்" என்று முனகியவள், "என்னால உங்களுக்கு ரொம்ப ரொம்ப கஷ்டம்ல ட்ரைனர்? அன்னிக்கு என்ன பாவப்பட்டு நீங்க மேரேஜ் பண்ணி இல்லாட்டி, உங்களுக்கு இப்டி ஒரு அவமானம் நடந்தே இருக்காதுல்ல. இவ்ளோ நடந்ததுக்கு அப்றம் எல்லாரையும் எப்டி பேஸ் பண்றதுன்னு தானே நீங்க காலேஜ் போகாம வீட்லயே இருக்கீங்க. என்ன மன்னிச்சுடுங்க ட்ரைனர்" என்று அவன் கைகளுக்குள்ளே சிறு பிள்ளை போல் தேம்பி அழுதாள் சிற்பி.


இப்பொழுதெல்லாம் மனைவி முகம் சுணங்கினாலே தாள முடியாது தவித்துப் போய் விடுபவனுக்கு, அவள் இப்படி அழுவதை தாங்கி கொள்ள முடியாம என்ன?


சட்டென்று அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன், "அய்யோ அப்டிலாம் எதுவும் இல்லம்மா. அந்த சீனியர் லெக்சரர் பண்ண தப்புக்கு நீ எப்டி பொறுப்பாவ? அத்தோட நம்ம மேரேஜ மறைச்சு நானும் தான் தப்பு பண்ணிட்டேன். ப்ளீஸ் அழறதை நிறுத்துமா" என்று ஏதேதோ கூறி சமாதானம் செய்தான்.


ஆனால் அவள் கல்லூரியில் சேர்ந்த காலம் தொட்டு, அத்தனை மதிப்பு மரியாதையோடு பார்த்து வந்தவன், கடந்த சில நாட்களாக கல்லூரியின் பக்கமே செல்லாமல் இருப்பதற்கு தான் தான் முழு காரணம் என்று  நம்பியவள், அவன் நெருக்கத்தைக் கூட உணராது, "இல்ல ட்ரைனர், நீங்க என்ன சமாதானம் செய்றதுக்காக  சொல்லறீங்க. என்னால உங்களுக்கு ரொம்ப ரொம்ப கஷ்டம் தான். எனக்கு நல்லா தெரியும். உங்களுக்கு மட்டுமில்ல. என்னால யாருக்குமே நல்லது நடக்கல. நா எல்லாருக்குமே பாரமா தான் இருக்கேன்" என்று அவள் பாட்டில் புலம்பிக் கொண்டே இருந்தவள்,


"ஹேய் இப்ப அழறதை நிறுத்தப் போறியா இல்லியாடி?" என்ற உரத்த குரலில் தான், அதிர்ந்து நிமிர்ந்து அவனை ஏறிட்டுப் பார்த்தாள் சிற்பி.


அப்படி ஏறிட்டுப் பார்த்தவளை, "நீயெல்லாம் சொன்னா கேக்க மாட்ட. ட்ரைன் பண்ணாதான் வழிக்கு வருவ. வ்ரைட்!" என்றும் அதட்டி, அவள் என்ன ஏதென்று உணரும் முன்னரே, அவள் இதழ் நோக்கிக் குனிந்தவன், அவள் இதழ்களின் மேல் தன் அதரங்களையும் அழுத்தமாகவே புதைத்து இருந்தான்.


அழுத்தம் என்றாலும் லேசுபாசான அழுத்தம் எல்லாம் இல்லை. இத்தனை தினங்களாக மனைவி மேல் தான் கொண்டிருக்கும் காதலை எல்லாம், அந்த ஒற்றை முத்தத்திலே அவளுக்கு கடத்திவிட முனைந்தது போல் அப்படி ஒரு ஆழம் ஆடவனின் இதழ் ஒற்றலில்.


அதில் மென்மேலும் அதிர்ந்து, விழித்தவளை, தன் விழிகளால் களவாடியபடியே, "உன்னால எனக்கு ரொம்ப ரொம்ப கஷ்டம்தான்டி. அதுக்கு தான் இந்த பனிஷ்மென்ட். ஆனா காலம் முழுசும் இந்த கஷ்டம் எனக்கு வேணும் தேவி. வித் பனிஷ்மென்ட்டோட. வ்ரைட்!" என்று மீண்டும் அவள் கன்னங்களைப் பற்றி, இப்பொழுது சற்றே நிதானமாக, இதழ்களைக் கொய்து கொண்டவனின் செயலில், மெல்ல மெல்ல விழிகளை மூடத் தொடங்கினாள் சிற்பிகா தேவி.


Comments

Popular posts from this blog

அகத்தை அடைக்காதே அசுரதேவா

ஏகாந்தம் எனதாக

❤️நீயே காதல் நூலகம்❤️